Delhi Water Minister Atishi Admitted on Hospital: தண்ணீர் கேட்டு ஆம் ஆத்மி அமைச்சர் உண்ணாவிரத போராட்டம்; உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.!

டெல்லிக்கு ஹரியானா மாநிலம் தண்ணீர் வழங்கக்கூறி, உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில அமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.

Delhi Water Minister Atishi (Photo Credit: @ANI X)

ஜூன் 25, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில், கடந்த சில மாதங்களாகவே கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஏற்றிவரும் டேங்கர் லாரிகளை மக்கள் சிறைபிடித்து, கூட்டாக சூழ்ந்து தண்ணீரை தங்களின் வீட்டுக்கு சேமித்து வருகின்றனர். இந்த விசயத்திற்கு மாநில அரசும், டெல்லி மாநகராட்சி நிர்வாகமும் தீர்வு கண்டறிய இயலாமல் தவித்து வருகின்றது. IND Vs AUS: திருப்புமுனையை தந்த டார்விஸ் ஹெட் விக்கெட்; அசத்திய ரோஹித் சர்மா.. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா.! 

நீர்வளத்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி:

ஹரியானா மாநிலத்தில் இருந்து, நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அம்மாநில அரசு நீரை வழங்காதது டெல்லி மாநில நீர்பற்றாக்குறை பிரச்சனைக்கு காரணம் என குற்றம் சாட்டிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் அதிசி (Delhi Water Minister Atishi), கடந்த நான்கு நாட்களாக ஹரியானா மாநில அரசு நீர் வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து இருந்தார். இதனிடையே, நேற்று அவரின் உடல்நிலை தீவிரமாகி மயக்கமடையவே, கட்சியினர் அவரை எல்.என்.ஜெ.பி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அவரின் இரத்த சர்க்கரை அளவு 43 புள்ளிகள் என்ற அளவில் குறைந்துவிட, மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்து வருகின்றனர்.