Allu Arjun: ரசிககளுக்கு பெரும் அதிர்ச்சி.. அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!
புஷ்பா 2 திரைப்படத்தில் தொடங்கி பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 22, ஹைதராபாத் (Cinema News): தெலுங்கு திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம்வரும் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடிப்பில், சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. பல மொழிகளில் உலகளவில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், ரூ.1000 கோடிகளை கடந்து வசூல் செய்துள்ளது. படத்தின் எச்.டி அளவிலான தரம் கொண்ட காட்சிகளும், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. Pushpa 2 Leaked: புஷ்பா 2 திரைப்படத்தின் அல்டரா எச்.டி காட்சிகள் இணையத்தில் கசிந்தது; படக்குழு அதிர்ச்சி.!
திரையரங்கில் நடந்த சோகம்:
இதனிடையே, ஹைதராபாத் சாந்தி திரையரங்கில், ரசிகர்களுடன் அல்லு அர்ஜுன் படம் பார்க்கச் சென்றார். அப்போது, ரேவதி என்ற பெண்மணி கூட்டநெரிசலில் சிக்கி பலியாகினர். அவரின் மகன் மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், ரூ.25 இலட்சம் நிதியுதவியும் அறிவித்தார். மூளைச்சாவு அடைந்த அவரின் மகன், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். மருத்துவ செலவுகளை அல்லு அர்ஜுன் கவனிக்கிறார்.
அல்லு அர்ஜுனின் வீடு மீது தாக்குதல்:
இதனிடையே, பெண் பலியான வழக்கு தொடர்பான விவகாரத்தில், காவல்துறையினர் அல்லு அர்ஜுனை கைது செய்து ஒருநாள் சிறையில் அடைத்தனர். பின் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்து தன்னை திட்டமிட்டு சிலர் அழிக்க முயற்சிப்பதாகவும், 20 ஆண்டுகால தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில், இன்று நடிகர் அல்லு அர்ஜுனின் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுவர் ஏறிக்குதித்து வந்தவர்கள், அல்லு அர்ஜுன் வீட்டினை தாக்கி இருக்கின்றனர். இந்த சம்பவம் அவரின் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என அல்லு அர்ஜுன் கோரிக்கை: