டிசம்பர் 22, ஹைதராபாத் (Cinema News): செம்மரக்கடத்தல் தொடர்பான அரசியல், ரவுடியிசம் பின்னணி கொண்ட திரைப்படமாக, கடந்த 2022 டிசம்பர் மாதம் புஷ்பா (Pushpa) திரைப்படம் வெளியானது. சுகுமார் இயக்கத்தில், நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா, என் சாமி உட்பட பல பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசையமைப்பு பணிகளை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டு இருந்தார். ரூ.200 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.350 கோடியை கடந்து வசூல் செய்தது. இதனையடுத்து, புஷ்பா படத்தின் இரண்டாம் (Pushpa 2) பாகமும் விறுவிறுப்புடன் தயாராகி 05 டிசம்பர் 2024 அன்று படம் வெளியானது. Bigg Boss Tamil Season 8: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறார் ரஞ்சித்? அன்ஷிதா - விஷால் கூட்டணியை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி.!
புஷ்பா 2 அல்டரா எச்.டி காட்சிகள் வெளியானது:
இந்நிலையில், புஷ்பா திரைப்படத்தின் அல்ட்ரா எச்.டி எனப்படும் முழு அளவிலான தரம் கொண்ட காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. குறிப்பாக 8.5 ஜிபி அளவிலான பைல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை திரையரங்கில் வைத்து தெளிவான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் காரணமாக படத்தின் இயக்குனர் சுகுமாரன், வடமாநிலங்களில் இருக்கும் திரையரங்குகளில், குறிப்பாக மால்களில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது மறைமுக ஆத்திரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், மால்களில் இவ்வாறான காட்சிகள் உயரிய தரத்துடன் பதிவு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் களநிலவரங்கள் கூறுகின்றன.
ரூ.1000 கோடிகளை கடந்து வசூல்:
புஷ்பா 2 திரைப்படம் சர்வதேச அளவில், வெளியான 16 நாட்களில் ரூ.1004.35 கோடி வசூல் செய்துள்ளது. ஹிந்தியில் மட்டும் ரூ.600 கோடி, தெலுங்கில் ரூ.297 கோடி, தமிழ்நாட்டில் ரூ.52 கோடி, கர்நாடகாவில் ரூ.7 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் அதே வேளையில், படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி, அவை திருட்டுத்தனமாக இணையதளங்களிலும் வெளியாகியுள்ளது. மேலும், படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை தரும் வகையில், புஷ்பா 2 திரைப்படம் திருட்டுத்தனமாக பார்க்கும் இணையங்களிலில் வெளியாகி இருக்கிறது.
புஷ்பா 2 திரைப்படம் இணையதளங்களில் அல்ட்ரா எச்.டி முறையில் வெளியானதாக அறிவிப்பு:
SHOCKING: Pushpa 2⃣ ultra HD leaked online🛑
— Manobala Vijayabalan (@ManobalaV) December 20, 2024