Ajit Doval Appointed as the National Security Adviser: தொடர்ந்து 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்..!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல், அமைச்சரவை நியமனக் குழுவின் உத்தரவின் பேரில் 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜூன் 13, புது டெல்லி (Delhi News): முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல் மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Adviser) நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை நியமனக் குழுவின் உத்தரவில் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார். 1968-யில் ஐபிஎஸ் அதிகாரியான இவர், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் மற்றும் அணுசக்தி விவாகரங்களின் நிபுணர் ஆவார். Intoxicated Youth Climbed Electric Pole: குடிபோதையில் மின்கம்பத்தில் ஏறி ரகளை செய்த வாலிபர்; பொதுமக்கள் அச்சம்..!
தற்போது, அவரது 3-வது பதவிக்காலம் ஜூன் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மோடியின் பதவிக் காலத்தில், உத்தரவின்படி, தோவலுக்கு முன்னுரிமை அட்டவணையில் கேபினட் அமைச்சர் பதவி ஒதுக்கப்படும். மேலும், அவரது நியமனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனித்தனியாக அறிவிக்கப்படும்.
இதனிடையே, பிரதமரின் முதன்மை செயலாளராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பிகே மிஸ்ராவை நியமிக்கவும், நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவரது நியமனம் பிரதமரின் பதவிக் காலத்துடன் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் அது இணையாக இருக்கும்.