HC on Not Allowing Spouse To Have Sex: துணையை உடலுறவு கொள்ள அனுமதிக்காதது மனக்கொடுமை - அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

திருமணமான தம்பதிகள் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த நிலையில், நீதிபதிகளின் விசாரணையில் கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் விவாகரத்து வழங்கப்பட்டது.

Allahabad Court | Couple Enjoy Bed Sad (Photo Credit: Bar & Bench Freepik)

மே 25, அலகாபாத் (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் (Allahbad Court) நீதிமன்றத்தில், விவாகரத்து வழக்கு ஒன்று நடைபெற்றது. இந்த வழக்கு நீதிபதிகள் சுனீத் குமார், இராஜேந்திர குமார் (Justice Suneet Kumar and Justice Rajendra Kumar) அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தம்பதிகளுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

கடந்த மே 1979ம் ஆண்டு நடைபெற்று முடிந்த திருமணத்தில் (Marriage), விருப்பம் இல்லாத மனைவி கணவரிடம் இருந்து விலகியே இருந்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் மனைவியின் நடத்தையும் மாறிய நிலையில், கணவருடன் விலகல் மேலும் அதிகரித்துள்ளது. கணவர் மனைவியாக வாழ தனது துணையை எவ்வுளவு சமாதானம் செய்தும் பலனில்லை.

இருவரும் திருமணம் ஆனதில் இருந்து எவ்வித உறவையும் ஏற்படுத்திக்கொள்வது நிலையில், சில ஆண்டுகள் இருவரும் வாழ்ந்து பின் தங்களின் பெற்றோர் வீட்டில் தனித்தனியே வைக்க தொடங்கினர். 6 மாதம் கடந்து கணவர் வாழ்க்கையை தொடங்க அழைத்தும் பலனில்லை. இதனால் கணவர் கிராம பஞ்சாயத்தை கூட்டி நடந்த பேச்சுவார்த்தையில், ரூ.22 ஆயிரம் மனைவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டு விவாகரத்து பெற்று வந்தார். Women Killed Children & Suicide: நடந்தையில் சந்தேகப்பட்ட கணவர்.. 2 பச்சிளம் குழந்தைகளை கொன்று, கிணற்றில் குதித்து தாய் தற்கொலை.!

கிராம பஞ்சாயத்தின் முடிவுக்கு பின்னர் பெண்மணி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், சட்டபூர்வ விவகாரத்து (Divorce) கணவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அங்கு இவர்களின் திருமணத்திற்கான புகைப்படம் மட்டுமே ஆதாரமாய் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பத்திரிகை உட்பட பிற எவையும் ஆவணமாய் இல்லை.

இதனால் மனுதாரருக்கு விவாகரத்து வழங்க இயலாது என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படவே, வாதங்களின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்திய நீதிபதிகள் சுனீத் குமார், இராஜேந்திர குமார் அமர்வு, இந்து திருமண சட்டப்படி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், தனது வாழ்க்கை துணையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உடலுறவு கொள்ள அனுமதிக்காதது மனக்கொடுமை என்றும் கூறினர்.