Electrician Death: மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி; மின்கம்பத்தில் 4 மணிநேரம் தொங்கிய உடல்..!
ஐதராபாத்தில் மின்சாரம் தாக்கி பலியான எலக்ட்ரீஷியனின் உடல் சுமார் 4 மணிநேரம் மின்கம்பத்தில் தொங்கிய அவலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 10, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அடிலாபாத் மாவட்டம், யபல்குடா கிராமத்தில் மின் மோட்டார் இணைப்பை வழங்குவதற்காக எலக்ட்ரீஷியன் (Electrician) மோதிராம் (வயது 38) என்பவர் மின்கம்பத்தில் ஏறியுள்ளார். அப்போது, அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Minor Girl Gang Rape: 15 வயது சிறுமியை காதலன், அவனின் நண்பனுக்கு விருந்தாக்கிய கேடுகெட்ட இளம்பெண்.. விசாரணையில் பதரவைக்கும் உண்மை.. தமிழகமே அதிர்ச்சி..!
இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் தெளிவான உத்தரவாதம் அளிக்காத காரணத்தினால், சடலத்தை கீழே இறக்க மாட்டோம் என்றனர். இதனால், காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை என சுமார் 4 மணிநேரம் சடலம் மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் கிடந்தது. பின்னர், காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். மேலும், ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க மின்சாரத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், லைன்மேன் மற்றும் ஜூனியர் லைன்மேனுக்குத் தெரியாமல் மோதிராம் மின்கம்பத்தில் ஏறி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்திற்கும் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அடிலாபாத் கிராமப்புற கூடுதல் உதவி பொறியாளர் திருப்பதி ரெட்டி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.