Andhra Court Denies Bail: அமராவதி இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு வழக்கில், நர லோகேஷுக்கு ஜாமீன் ரத்து: உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.!
அதைத்தொடர்ந்து இன்று ஆந்திர உயர்நீதிமன்றம் நர லோகேஷ் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 29, அமராவதி (Political News): ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியின் (Telugu Desam Party) பொதுச் செயலாளர் நர லோகேஷ், ஆந்திர மாநிலம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
அமராவதி இன்னர் ரிங் ரோடு (Inner Ring Road) சீரமைப்பு பணிகளில் ஊழல் செய்ததாக சந்திரபாபு நாயுடு மற்றும் முன்னாள் அமைச்சர் நாராயணா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ஜாமீனுக்காக காத்திருக்கிறார். Aranmanai 4: பொங்கலுக்கு அட்டகாசமாக களமிறங்குகிறது சுந்தர் சி-யின் அரண்மனை 4: பேய் விருந்துக்கு தயாராகுங்கள்.!
இந்த ஊழலில் நர லோகேஷ் 14-வது குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என்று சிஐடி (CID) தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம் நர லோகேஷுக்கு 41-ஏ குற்றப்பிரிவின் கீழ் நோட்டீஸ் வழங்க அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி நர லோகேஷ் சிஐடி அதிகாரிகள் முன்பு விசாரணைக்காக ஆஜராக வேண்டும்.
2014-2019 ஆம் ஆண்டுகளில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியின்போது இன்னர் ரிங் ரோடு சீரமைப்பு திட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்த ஊழல் திட்டத்தில் சில முக்கிய முடிவுகளை நர லோகேஷ் எடுத்து இருக்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.