Midday Meal Found Lizard: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பல்லி: 64 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.!

சத்துணவு மையத்தில் சமைத்து வழங்கப்பட்ட அரிசி சாதத்தில், பல்லி விழுந்ததை கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட சமையலரால் 64 குழந்தைகள் உடல்நலக்குறைவை எதிர்கொண்டனர்.

Andhra School Students Admit Hospital (Photo Credit: @ANI X)

நவம்பர் 23, அன்னமய்யா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அன்னமய்யா (Annamayya, Andhra Pradesh) மாவட்டம், டேகுலாபலேம் கிராமத்தில் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த அரசுப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், நேற்று மதியம் தங்களது பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவை வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர். இந்நிலையில், உணவை சாப்பிட்ட ஒருமணிநேரத்திற்குள் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என அடுத்தடுத்து மாணவர்கள் அவதிப்பட, பதறிப்போன பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவர்களை அன்னமய்யா மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். Rain Holiday Announcement Tamilnadu: விடியவிடிய தொடரும் கனமழை.. 8 மாவட்ட பள்ளி., கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! 

அங்கு மாணவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. விசாரணையில், மாணவர்கள் மதியம் சாப்பிட்ட உணவு விஷமானது தெரியவந்தது. மொத்தமாக 64 மாணவ - மாணவியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை செய்தனர். விசாரணையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து இருந்தது கண்டறியப்பட்டது.

உணவின் மாதிரியை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தில், தவறு இழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.