நவம்பர் 23, சென்னை (Chennai): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) தீவிரம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது. Karur Van Crash: மழைநீர் தேங்கி சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த எமன்: நல்வாய்ப்பாக தப்பித்த 23 உயிர்கள்.. அதிகாரிகளின் அலட்சிப்பணியால் சோகம்.!
நவம்பர் 23ம் தேதியான இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தென்காசி, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். iDMB Top Actors India 2023: இந்திய அளவில் சிறந்த நடிகர்கள் டாப் 10 பட்டியலை வெளியிட்டது ஐடிஎம்பி... நயன்தாரா & விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் & கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் காலை முதல் தொடரும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.