IPL Auction 2025 Live

Electrocution Attack in Ugadi Festival: உகாதி பண்டிகை கொண்டாட்டத்தின்போது சோகம்; தேரில் மின்சாரம் தாக்கி 13 சிறுவர்கள் படுகாயம்..!

இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் நடந்துள்ளது.

Electrocution in Kurnool (Photo Credit: @TeluguScribe X)

ஏப்ரல் 11, கர்னூல் (Andhra Pradesh News): தெலுங்கு மொழி பேசும் மக்கள் பலரும், உகாதி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் வசித்து வரும் ஊரில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் களைகட்டி இருக்கின்றன. இந்நிலையில், உகாதி கொண்டாட்டத்தின்போது, சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்திற்குள்ளான சோகம் நடந்துள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டம், சின்ன தெக்கூர் கிராமத்தில் ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. India Monsoon Update: எல் நினோ விளைவால் வெளுத்தெடுக்கப்போகும் பருவமழை; இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

மின்சாரம் (Electrocution in Kurnool) தாக்கி பயங்கர விபத்து: இன்று கோவில் தேர் வீதிஉலா வந்தது. அச்சமயம் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் திரளாக திரண்டு இருந்தனர். அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்களும் தேரின் மீது அமர்ந்து உலா வந்தனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக தேரின் மீது மின்சாரம் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தேரில் இருந்தவாறு பயணம் செய்த 13 சிறார்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். பலரும் மூர்ச்சையாகி கிடந்ததால் பதறிப்போன உள்ளூர் மக்கள், குழந்தைகளை முதலுதவி செய்து மீட்டவாறு கர்னூல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.