ஏப்ரல் 11, புதுடெல்லி (New Delhi): உலகளவில் மனித செயல்பாடுகள் இயற்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதற்கு பின்னர், மக்களும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பல நாடுகளில் திடீர் வெள்ளம், மழை, புயல், வெப்பம், வறட்சி என பருவநிலை சார்ந்த பிரச்சனைகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவை (India Monsoon) பொறுத்தமட்டில் பருவநிலை மாற்றம் தற்போதைய சூழலில் மக்களின் பெரும் தலைவலி பிரச்சனையாக உருவாகவில்லை எனினும், விரைவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இந்தியாவையும் கடுமையாக பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. Earthquake in Bay of Bengal: வங்கக்கடலில் ரிக்டர் அளவுகோலில் 4.2 நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
பருவமழையை உச்சக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் எல் நினோ (El Nino Effect): இந்நிலையில், எதிர்வரும் இந்திய பருவகாலத்தில் லா நினோ (La Nino Effect) காரணமாக, 2024ல் அதிக மழையை எதிர்கொள்ளலாம் என இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் கணிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, எதிர்வரும் பருவமழை லா நினோ காரணமாக முன்கூட்டியே தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதால், பருவமழை கணிப்பு விஷயத்தில் இவ்வாண்டு சவாலையும் ஏற்படுத்தி இருக்கிறது. School Van Accident: பள்ளி வாகனம் கவிழ்ந்து பயங்கர விபத்து.. 6 மாணவர்கள் பரிதாப பலி., ஓட்டுனரின் அலட்சியம், அதிவேகத்தில் நேர்ந்த சோகம்.!
அதிக மழைக்கு 2024ல் வாய்ப்பு: நடப்பு ஆண்டுக்கான பருவமழை தீவிரமாக இருக்கும். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கணிசமான மழை அளவு இருக்கும். பசுபிக் பெருங்கடல் பகுதியில் குளிர்ச்சியான கடல் மேற்பரப்பு வெப்பநிலை காரணமாக, இந்திய பெருங்கடல் வெப்பநிலை ஏற்ற - இறக்கத்தை சந்திக்கும். ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் பருவமழை உச்சத்தில் இருக்கும். பருவமழை நகர்வுகள் மேற்கு - வடமேற்கு இந்தியா, வடக்கு அரபிக்கடல் பாதைகளை மையமாக கொண்டு அமையும். இதனால் மேற்கூறிய இந்திய நிலப்பரப்புகள் அதிக மழையை எதிர்கொள்ளும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.