Train Crash Vizag: 9 பேரின் உயிரை காவுவாங்கிய இரயில் விபத்து; பாசஞ்சர் இரயில்கள் தடம்புரண்டதால் விபரீதம்.!
இவ்விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்த நிலையில், பலரும் படுகாயம் அடைந்தனர்.
அக்டோபர் 30, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் இருந்து பலாசா நோக்கி செல்லும் பாசஞ்சர் இரயில் 08532, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா செல்லும் பாசஞ்சர் இரயில் 08504 நேற்று விசாகப்பட்டினம் அருகே ஆலமண்டா கந்தகப்பள்ளி பகுதியில் தடம் புரண்டு மோதி விபத்திற்குள்ளாகியது.
நேற்று இரவு விபத்து நடந்த நிலையில், இரண்டு இரயில்களின் பெட்டிகளும் மோதிக்கொண்டு பலத்த சேதம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த விசாகப்பட்டினம் இரயில்வே காவல் & மீட்பு படையினர், உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், உயர்மட்ட இரயில்வே துறை அதிகாரிகளும் நிகழ்விடத்தில் குவிந்தனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த 09 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. IND Vs ENG: சொதப்பல் ஆட்டத்தால் தொடர் தோல்வியில் இங்கிலாந்து; 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த இந்தியா.. ஏமாற்றம் அளித்த விராட்.!
மேலும், 30 பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய மீட்பு படையினரும் நிகழ்விடத்துக்கு விரைந்ததால், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மாநில முதல்வர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி, விபத்தில் உயிரிழந்தோர்க்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமடைந்தோர் உயரிய சிகிச்சை பெற தேவையான மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இரயில்வே துறை அமைச்சர் அஷ்வ்னி வைஷ்ணவுக்கு தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்தார். உயிரிழந்த மக்களுக்கு தனது இரங்கலையும் பதிவு செய்தார். இரயில்கள் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.