IND Vs ENG 30 Oct 2023 (Photo Credit: X)

அக்டோபர் 30, லக்னோ (Cricket News): 23வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC Cricket World Cup 2023), இந்தியாவில் வெகு விமர்சையாக நடைபெற்ற வருகிறது. 48 ஆட்டங்களில் தற்போது வரை 29 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து (IND Vs ENG) அணிகள் லக்னோவில் (Lucknow) உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின.

இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்ததை தொடர்ந்து, முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் ரோகித் சர்மா (Rohit Sharma) 101 பந்துகளில் 87 ரன்னும், கேஎல் ராகுல் (K.L Rahul) 58 பந்துகளில் 39 ரன்னும், சூரியகுமார் 47 பந்துகளில் 49 ரன்னும், பும்ரா 25 பந்துகளில் 16 ரன்னும் எடுத்திருந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்த இந்திய அணி (Team India) 229 ரன்கள் சேர்த்து இருந்தது. இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் இந்திய அணி சற்று திணறியது, விக்கெட்டுகளை இழக்கவைத்து, ரன்களையும் குறைத்தது. போட்டியின் போது இந்திய ரசிகர்கள் மனதுக்குள் பதைபதைப்பு அதிகம் எழுந்தன. Rain Alert Tamilnadu: அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

மறுமுனையில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து (Team England) அணியின் வீரர்கள் சொற்பரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகியதால், இந்தியாவின் வெற்றி உறுதியானது. இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய ஜானி 23 பந்துகளில் 14 ரன்னும், மலான் 17 பந்துகளில் 16 ரன்னும், ஜோஸ் 23 பந்துகளில் 10 ரன்னும், மொயீன் அலி 31 பந்துகளில் 15 ரன்னும், லிவிங் ஸ்டண் 46 பந்துகளில் 27 ரன்னும் அடித்து அவுட் ஆகி வெளியேறினர்.

ஆட்டத்தின் முடிவில் 34.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்த இங்கிலாந்து அணி 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடிய விராட் கோலி ஒன்பது பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.

உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேறியது இதுவே முதல் முறையாகும். இதனால் அவரின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகினர். அதேபோல, இங்கிலாந்து அணி கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கருதப்படும் நிலையில், தொடர் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.