Army Officer's Fiancee Sexual Assault: காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; 5 காவலர்கள் பணியிடை நீக்கம்.. நடந்தது என்ன..?

ஒடிசாவில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி, காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Army Officer's Fiancee Sexual Assault (Photo Credit: @IndiaToday X)

செப்டம்பர் 21, புவனேஸ்வர் (Odisha News): ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் (Bhubaneswar) கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அன்று இரவு, மேற்கு வங்கத்தில் பணிபுரியும் ராணுவ அதிகாரி ஒருவரும் அவரது வருங்கால மனைவியும் காரில் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் அவர்களை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். பின், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த இவர்கள், புவனேஸ்வரில் உள்ள பாரத்பூர் (Bharatpur)காவல்நிலையத்தில் அன்று இரவு புகார் அளித்துள்ளனர். அப்போது, அந்த புகாரை அலட்சியப்படுத்தியுள்ளனர். Minor Girl Rape: 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. ஆசிரியர் அதிரடி கைது..!

பாலியல் வன்கொடுமை:

இதனால், ஆத்திரமடைந்த இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, ராணுவ அதிகாரியை (Army Officer) சிறையில் அடைத்தனர். மேலும், அவரது வருங்கால மனைவியையும் அடித்து துன்புறுத்தி சிறையில் அடைத்து, காவல் அதிகாரிகள் உட்பட 5 பேர் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரை அடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவலர்கள் பணியிடை நீக்கம்:

இதனையடுத்து, ராணுவ அதிகாரி குற்றப் பிரிவு, ஏடிஜி அருண் போத்ராவிடம் முறையான புகார் அளித்தார். பரபரப்பான இச்சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு, இதுவரை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும், தம்பதியரை தாக்கி சித்திரவதை செய்ததற்காக இதுவரை 5 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதி: