IPL Auction 2025 Live

Youth Bite Cop Finger: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலரின் விரலை கடித்த இளைஞர்; விதியை மீறி பயணித்ததை கண்டித்ததால் அதிர்ச்சி செயல்.!

போக்குவரத்து விதிமீறலுக்கும் பெங்களூரில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Youth Bite Cop Finger(Photo Credit: @krjayathirtha X)

பிப்ரவரி 13, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், வில்சன் கார்டன் பகுதியில் நேற்று பெங்களூர் மாநகர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அச்சமயம், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தலைக்கவசம் அணியாமல் இருந்துள்ளார். அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியபோது, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இளைஞர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதனால் அவரை அதிகாரிகள் வாகனத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இளைஞர் ஆத்திரத்தில் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தவாறு, அதிகாரியின் கைகளை கடிக்க முற்பட்டார். Infosys Narayan Murty and Akshata Murty: "மகளுடன் எளிமை" தந்தை - மகளாக ஐஸ்கிரீம் சாப்பிடும் இன்போசிஸ் நாராயண் மூர்த்தி & அக்ஷதா மூர்த்தி.! 

விதியை மீறியவரின் அதிர்ச்சி செயல்: இந்த சம்பவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் செல்போன் கேமிராவில் பதிவாகி இருக்கிறது. இதனையடுத்து, சட்டம் - ஒழுங்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த அதிகாரிகள், இளைஞரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். தலைக்கவசம் அணியாமல் விதியை மீறி வாகனத்தை இயக்கியது மட்டுமல்லாது, அதிகாரியின் விரலை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பின்னர் குற்றவாளி சையத் ஷாபி என்பவருக்கு எதிராக குற்றவழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நேற்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிவோம் உயிரை பாதுகாப்போம்.