Divorce within 12 Hours after Marriage: திருமண பந்தியில் கலவரம்; திருமணமான 12 மணிநேரத்திரத்தில் கணவரை விவாகரத்து செய்த இளம்பெண்.!
தனது சகோதரரை மணமகன் வீட்டார் தாக்கிய நிலையில், ஆத்திரமுற்ற இளம்பெண் தனது கணவரை திருமணமான 12 மணிநேரத்தில் விவாகரத்து செய்தார்.
அக்டோபர் 30, பாட்னா (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா, புல்வாரி ஷரீஃப் பகுதியில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது உணவு பரிமாறுவது தொடர்பாக, மணமகன் - மணப்பெண் வீட்டாரிடையே இரு தரப்பு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, மணப்பெண் சகோதரர் குலாம் நபி என்பவர், மணமகனின் சகோதரரால் தாக்கப்பட்டிருக்கிறார். இருதரப்பு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை சமாதானம் செய்துவைக்க முயற்சித்த நிலையில், அதில் எந்தவிதமான பலனும் இல்லை.
இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டுள்ளது. இவர்களின் திருமணம் அங்குள்ள நவாடா பகுதியில் இருக்கும் அன்சார் நகர், இமாம் காலனியில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்த பெண்மணி கணவர் மற்றும் இருதரப்பு குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும் கூறி தலாக் என மூன்று முறை கூறியுள்ளார். Airplane Crash: சிறியரக விமானம் விபத்திற்குள்ளாகி பயங்கர சோகம்; விமானி, பயணிகள் உட்பட 12 பேர் பலி.!
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்த நிலையில், மேற்படி என்ன செய்யலாம் என ஆலோசனையும் செய்து வருகின்றனர். கடந்த 2017 உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் 2019 இந்திய அரசியலமைப்பு சட்டப்படி முத்தலாக் முறை என்பது பெண்களுக்கு எதிரான செயலாக இருக்கிறது என்பதால், அதனை மத்திய அரசு தடை செய்து அறிவித்தது.
முஸ்லிம் மதப்படி மூன்று முறை முத்தலாக் சொல்லி பல இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பெண்மணி ஒருவர் முத்தலாக் சொல்லி தனது கணவரை திருமணம் ஆன 12 மணி நேரத்தில் விவாகரத்து செய்து இருக்கிறார்.