அக்டோபர் 31, வைசாலி (Bihar News): பீகார் மாநிலம், வைசாலியில் வாலிபர் ஒருவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைசாலியை சேர்ந்த தம்பதி அபிஷேக் குமார் - திவ்யா குமாரி (வயது 27). மனைவி தனது பேஸ்புக் மெசஞ்சரில் அதிகமாக நேரம் செலவழித்து வந்ததால், கணவர் அபிஷேக் குமார் தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். சகோதரியின் கழுத்தை நெரித்து, கைகால்களை உடைத்து கொடூர கொலை.. வாலிபர் வெறிச்செயல்..!
மனைவி கொலை:
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 30) இரவு திவ்யா பேஸ்புக் மெசஞ்சரில் அரட்டை அடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரது கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியைக் (Murder) கொன்றார். இதுகுறித்த விசாரணையில், தந்தையும் மகனும் இரவு முழுவதும் திவ்யாவை அடித்துக் கொண்டே இருந்துள்ளனர். இதன்காரணமாக அவர் இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அபிஷேக் மற்றும் அவரது தந்தை ரவி ரஞ்சனை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.