BJP MP Suresh Gopi Offers Prayers in Tali Maha Shiva Kshetram: மத்திய அமைச்சர் பதவி; பயபக்தியுடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் நடிகர் சுரேஷ் கோபி.!
பாஜக கேரளாவில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்ப்பட, அதனை மெய்ப்பித்து காண்பித்த நடிகருக்கு அமைச்சரவை பொறுப்பும் வழங்கி பாஜக கௌரவித்துள்ளது.
ஜூன் 12, கோழிக்கோடு (Kerala News): இந்தியா தேர்தல்கள் 2024ல் மிகப்பெரிய வெற்றியை அடைந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து இந்திய அரசை வழிநடத்துகிறார். கடந்த தேர்தலை விட பாஜக தலைமையிலான கூட்டணி குறைந்த அளவிலான தொகுதியில் பெரும்பான்மை பெற்று வெற்றி அடைந்தாலும், பல இடங்களில் தனது தலைமையிலான மற்றும் கூட்டணி ஆட்சியை நிறுவி சாதித்து இருக்கிறது.
கேரளாவில் தடம்பதித்த பாஜக:
இடதுசாரி கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவில், பாஜக ஒரு தொகுதியில் கூட வேரூன்ற வாய்ப்புகள் இல்லை என கூறப்பட்ட நிலையில், திருச்சூர் தொகுதியில் பாஜக வெற்றிகண்டு அசத்தி இருக்கிறது. இதன் வாயிலாக பாஜக கேரளாவில் தனது முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய நடிகர் சுரேஷ் கோபி, அத்தொகுதியின் பாஜக வெற்றி வேட்பாளராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். First Parliament Session on 18th Lok Sabha: குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர்.. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான நிலைக்குழு அறிவிப்பு.!
சுரேஷ் கோபி அமோக வெற்றி:
கேரளாவில் உள்ள மக்கள் நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்ப்பார்கள். அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கமாட்டார்கள் என பல ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த நிலையில், அந்த பேச்சுக்கும் அங்கு சுரேஷ் கோபியின் வெற்றி முற்றுப்புள்ளியை வைத்தது. மிகப்பெரிய அளவில் 412,338 வாக்குகள் பெற்று 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்த சுரேஷ் கோபிக்கு, பாஜக தனது அமைச்சரவையில் வாய்ப்பும் வழங்கியது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சுனில் குமார் 337,652 வக்குகள் பெற்றிருந்தார், காங்கிரஸ் வேட்பாளர் முரளீதரன் 328,124 வாக்குகள் பெற்று இருந்தார்.
அமைச்சரவையில் வாய்ப்பு:
தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை , மாநில சுற்றுலாத்துறை ஆகிய பொறுப்புகள் சுரேஷ் கோபிக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த பதவியேற்புக்கு பின் கேரளா திரும்பிய சுரேஷ் கோபி, கோழிக்கோடு நகரில் உள்ள தளி மஹா சிவா க்ஷேத்திரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதன் காணொளிகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அவை உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.