Anwar Raja Joined DMK (Photo Credit : @ThanthiTV X)

ஜூலை 21, சென்னை (Chennai News): அதிமுகவில் எம்பி, எம்எல்ஏ, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்த அன்வர் ராஜா இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றதாக தெரியவந்தது. இதனால் அதிமுக தலைமை அன்வர் ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து உத்தரவிட்டது. அதிமுக தலைமைக்கு பேரிடி.. திமுகவில் இணையும் முக்கிய புள்ளி.! 

திமுகவில் இணைந்தார்:

மேலும், திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அன்வர் ராஜா திமுகவில் இணைய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இந்த தகவலை அண்ணா அறிவாலயம் வட்டாரமும் உறுதி செய்துள்ளது. அதிமுக கட்சியில் எழுந்த பிரச்சனை காரணமாக மனக்கசப்பில் இருந்தவர் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். எதிர்வரும் சட்டப்பேரவை / மக்களவை தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக தலைமைக்கு பேரிடி :

2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை நேரில் சந்தித்து தனது பிரச்சார வியூகத்தை செயல்படுத்தி இருக்கிறார். இதனிடையே அதிமுக முன்னாள் எம்பி ஒருவர் திமுக கட்சியை நோக்கி பயணித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.