Prajwal Revanna (Photo Credit: @theanantaindia X)

ஆகஸ்ட் 01, மைசூரு (Karnataka News): பாலியல் வழக்கில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (Prajwal Revanna Case) கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. LPG Cylinder Price in Tamilnadu: பிறந்தது ஆகஸ்ட் மாதம்.. சிலிண்டர் விலை குறித்து தித்திப்பு செய்தி.!

வழக்கின் பின்னணி:

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்ற பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் சமயத்தில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக வெளிவந்த வீடியோக்களால் பெரும் சர்ச்சை வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வீட்டுப் பணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த 14 மாதங்களாக மைசூரு சிறப்பு நீதிமன்றம் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்பு:

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 01) பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை குற்றவாளி என ஹாசன் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய தண்டனை விவரங்கள் நாளை (ஆகஸ்ட் 02) அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை தேவகவுடா, சகோதரர் பிரக்யா, மற்றும் பாட்டி பவானி ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் உள்ளன.