Bomb Threat: லண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்து நடந்தது என்ன..?
லண்டன்-டெல்லி விஸ்தாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 10, டெல்லி (Delhi News): லண்டனில் இருந்து டெல்லிக்கு (London To Delhi) விஸ்தாரா விமானம் (Vistara Flight) நேற்று புறப்பட்டது. அதில், சுமார் 290 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் வெடிகுண்டு (Bomb) இருப்பதாக ஒரு காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இந்த துண்டு காகிதம் விமானத்திற்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பயணிகளிடையே சற்று பரபரப்பு ஏற்பட்டது. உடனே, விமானத்தில் இருந்த ஊழியர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா என தீவிரமாக பரிசோதனை செய்தனர். எதுவும் இல்லாத காரணத்தால் தொடர்ந்து டெல்லியை நோக்கி விமானம் சென்றது. Man Bleeds to Death: பூட்டிய வீட்டுக்குள் இரத்த வெள்ளத்தில் சடலம்: கதவைத் திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பகீர் சம்பவம்.!
பின்னர், டெல்லி விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனிடையே விமான நிலையத்தில் தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.