Budget 2023 - 24 Highlights: மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?... அசத்தல் அலசல் இதோ..!

கடந்த நிதியாண்டை போலவே இந்திய மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 2023 - 24 பட்ஜெட் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்க தொடங்கிவிட்ட நிலையில், அவற்றில் முக்கிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

Union Budget Session 2023-24 Finance Ministry Team (Photo Credit: ANI)

பிப்ரவரி 02: இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையின் (Central Cabinet) ஒப்புதல் பெற்ற 2023 - 24ம் நிதியாண்டு பட்ஜெட் (Union Budget 2023-24) அறிவிப்புகளை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (NIrmala Sitharaman) வெளியிட்டார். 7 முக்கிய அம்சங்களை கொண்டு உருவாகியுள்ள பட்ஜெட்டில் பல துறைகள் முன்னேற்றமடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவை குறித்த முக்கிய (Highlights Of Central Budget) அறிவிப்புகளை இன்று காணலாம்.

  1. இந்தியாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய தூண்களாக இருக்கும் இளைஞர்கள், பெண்கள், இளையோருக்கு என ரூ.10 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  2. சுயதொழில் புரிந்துவருவோரின் மாத வருமானம் என்பது ரூ.58 ஆயிரம் வரை இருந்தால் வருமான வரி என்பது கிடையாது.
  3. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க 50 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படுகிறது.
  4. சிகிரெட், பித்தளை, வைரம், தங்கம் & வெள்ளியின் மீதான இறக்குமதி வரிகள் அதிகரிக்கப்படுவதால், அவையின் விலை மேலும் உயரும்.
  5. ஆண்டுக்கு மாத ஊதியத்தை அடிப்படையில் ரூ.7 இலட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் இனி வருமான வரி செலுத்த தேவையில்லை. Building Collapsed: 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்.!
  6. செல்போன், கேமரா, தொலைக்காட்சி போன்றவற்றுக்கான உதிரிபாகங்கள் இறக்குமதி வாரியானது 2.5% குறைக்கப்படுகிறது.
  7. இந்தியாவில் உள்ள பல நகரங்களின் உட்கட்டமைப்புகளை கூடுதலாக மேம்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  8. விவசாயிகளை தொடர்ந்து இயற்கையின் பக்கம் திருப்ப, பி.எம் பிராணம் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
  9. இந்திய இரயில்வே துறையை வளர்ச்சிப்பாதைக்கு தொடர்ந்து எடுத்து செல்ல ரூ.2.4 இலட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  10. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் மேலும் புதியதாக 157 நர்சிங் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும். எல்லையோர மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 02, 2023 09:25 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now