அக்டோபர் 31, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) உடன் ஒரு நாள் போட்டிகளில் மோதியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகள் (India Vs Australia) மோதும் டி20 போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20ஐ போட்டிகள் (India Vs Australia T20I Series 2025):
இந்த போட்டியின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 31ஆம் தேதியும், மூன்றாவது ஆட்டம் நவம்பர் 02 ஆம் தேதியும் நடைபெறுகிறது. டி20ஐ போட்டியின் 2 வது ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று இந்திய நேரப்படி மதியம் 01:45 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை நேரலையில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் (Sony Sports) பக்கத்திலும் பார்க்கலாம். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. India Vs Bangladesh: இந்தியா Vs பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு.!
இந்திய அணி சொதப்பல் பேட்டிங்:
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிப் போயினர். அபிஷேக் ஷர்மா மட்டும் களத்தில் தொடக்கத்திலிருந்து நின்று ஆடினார். இந்த போட்டியில் சுப்மன் கில் 10 பந்துகளில் 5 ரன்களும், சஞ்சு சாம்சன் 4 பந்துகளில் 2 ரன்களும், சூரியகுமார் யாதவ் 4 பந்துகளில் 1 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். திலக் வர்மா இரண்டு பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமலும், அக்சர் படேல் 12 பந்துகளில் 7 ரன்களும், ஷிவம் துபே 2 பந்துகளில் 4 ரன்களும், ஹர்ஷித் ராணா 33 பந்துகளில் 35 ரன்களும், அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். குல்தீப் யாதவ் 6 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டாக்கினார். பும்ரா 1 பந்தில் ரன் அவுட்டானார்.போட்டியின் முடிவில் இந்திய கிரிக்கெட் அணி 18.4 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது.
விக்கெட்டுகளை குவித்த ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பந்து வீசிய ஜோஷ் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். சேவியர் & நாதன் 2 விக்கெட்டும், மார்கஸ் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தியிருந்தனர். ஒரு நாள் போட்டியில் தொடரை கைப்பற்ற தவறிய இந்தியா, டி20ஐ போட்டிகளில் தொடரை கைப்பற்றுமா? அல்லது ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவின் தோல்வி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரை சதம் அடித்து அசத்திய அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma):
FIFTY!
Abhishek Sharma has been at it from the word go.
He brings up a brilliant half-century off just 23 deliveries.
His 6th in T20Is 🔥🔥
Live - https://t.co/ereIn74bmc #TeamIndia #AUSvIND #2ndT20I pic.twitter.com/5lt8x71Tmr
— BCCI (@BCCI) October 31, 2025