IND Vs AUS 1st ODI (Photo Credit: @BCCI / @CricBuzz X)

அக்டோபர் 19, பெர்த் ஸ்டேடியம் (Sports News): ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், முதல் போட்டி (IND Vs AUS 1st ODI) இன்று தொடங்கிய நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்தது. இதனை அடுத்து, முதலில் பேட்டிங் செய்தது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி (IND Vs AUS 1st ODI):

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகர்கள் பலரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறியதால், 26 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. மேலும், மழை காரணமாகவும் ஆட்டம் தடைபட்டது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய ரோஹித் சர்மா 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். ஷுப்மன் கில் 18 பந்துகளில் 10 ரன்களும், விராட் கோலி 8 பந்துகளில் ஒரு ரன்கள் கூட எடுக்காமல் டக்வுட்டிலும் வெளியேறினர். ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 11 ரன்களும், அக்ஸர் படேல் 38 பந்துகளில் 31 ரன்களும், கே.எல் ராகுல் 31 பந்துகளில் 38 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 பந்துகளில் 10 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 11 பந்துகளில் 19 ரன்களும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சார்பில் பந்து வீசிய மேத்யூ, மிட்சல், ஜோஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருந்தனர். INDW Vs ENGW: இந்தியா Vs இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?.. ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025.! 

ஆஸ்திரேலிய அணி அசத்தல் பந்துவீச்சு:

137 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்க ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணிக்கு மழை காரணமாக 131 ரன்கள் 26 ஓவரில் எடுத்தாக வேண்டும் என்ற டார்கெட் வைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மிட்செல் மார்க்ஸ் 51 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்தார். ஜோஸ் 29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 21.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு தனது இலக்கை எட்டி அதிரடி வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அக்சர் படேலின் அசத்தல் ஆட்டம்:

கே.எல். ராகுல் அதிரடி ஆட்டம்: