Narayan Rane: "என்னை கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டது" - மத்திய அமைச்சர் உத்தவ் தாக்கரே மீது பரபரப்பு குற்றசாட்டு.!
மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக மத்திய அமைச்சர் பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
ஏப்ரல் 05, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai) பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மத்திய சிறு, குறு தொழிலார்துறை அமைச்சர் நாராயண் ரானே (Narayan Rane), செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மராட்டிய மாநில முன்னாள் முதல்வர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகாராஷ்டிரா மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) பணியாற்றுகையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கொள்முதல் செய்யப்பட்ட மருந்து பொருட்களில் ஊழல் செய்யப்பட்டன. இந்த ஊழலுக்கு உத்தவ் தாக்கரே மட்டுமே முழு பொறுப்பு. அவர் முதல்வராக இருக்கையில் என்னை கொலை செய்ய திட்டமிட்டார். Rudhran Movie: வில்லன் கதாபாத்திரத்தில் அடித்து நொறுக்கும் சரத்குமார்.. ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட டிரைலர் வெளியீடு.!
கூலிப்படைக்கு பணம் கொடுத்ததும் என்னை கொலை செய்ய ஆட்களை ஏவினார். அவர்களால் முடியவில்லை என்று பல வழிகளில் அதனை முயற்சித்தார். ஆனால், எவராலும் என்னை தொட்டுக்கூட பார்க்க இயலவில்லை" என்று தெரிவித்தார். ரானே சிவசேனா ஆட்சியில் முதல்வராகவும் பணியாற்றி இருக்கிறார். உத்தவுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து சிவசேனாவின் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.