EPFO Grants ‘Diwali Gift’ for Employees: தீபாவளி பரிசாக பிஎப் தொகையை வரவு வைத்தது மத்திய அரசு: தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு.!

பிஎப் வட்டி தொகை வரவு வைப்பது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பலருக்கும் நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்.

EPFO (Photo Credit: epfindia.gov.in )

நவம்பர் 10, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிக்கையின்படி, ஊழியர்களுக்கான வருங்கால வாய்ப்பு நிதி அமைப்பு, தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் வட்டித்தொகையை வரவு வைக்க தொடங்கியுள்ளது.

கடந்த 2022 - 2023ம் நிதியாண்டுகளில், பிஎப் கணக்கில் முதலீடுகளான வட்டி விகிதம் என்பது 8.15% ஆகும். சில பயனர்களுக்கு முன்னதாகவே வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த வேலை நாட்களில் பலருக்கும் தொகை வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎப் வட்டி தொகை வரவு வைப்பது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவிக்கையில், "24 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சியோருக்கு அடுத்தடுத்த நாட்களில் தொகை வரவு வைக்கப்படும்" என தெரிவித்தார்.

இணையவழியில் EPFO வரவை சரிபார்க்க, www.epfindia.gov என்ற இணையத்திற்கு சென்று பயனரின் UAN எண்ணை உள்ளீட்டு, உள்நுழைந்து வரவை சரிப்பார்களாம். அதேபோல, 7738299899 என்ற எண்ணுக்கு, EPFO பதிவு செய்த எண்ணில் இருந்து EPFOHO UAN ENGŴ என குறுஞ்செய்தி அனுப்பியும் தகவலை கோரலாம்.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி ஆகிய மொழியிலும் இச்சேவை கிடைக்கின்றன.