BSP Candidate Injured: எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்வில் சோகம்; இளம் பெண் வேட்பாளரின் தலையில் விழுந்த தராசு.!
ஆதரவாளர்களின் அன்பிற்கிணங்க கோவிலில் எடைக்கு எடை நாணயம் வழங்கும் செயலுக்கு ஒப்புக்கொண்ட பெண் வேட்பாளரின் தலையிலேயே தராசு உடைந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது.
மே 28, சண்டிகர் (Chandigarh News): ஏழு கட்டமாக நடைபெறும் இந்திய பொதுத்தேர்தலில், ஆறு கட்டங்கள் நிறைவுபெற்றுவிட்ட நிலையில், ஏழாவது கட்டமாக ஜூன் மாதம் 01ம் தேதி இறுதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
சண்டிகர் தொகுதியின் வேட்பாளர்: அந்த வகையில், பஞ்சாபில் உள்ள சண்டிகர் மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் (Bahujan Samaj Party BSP) வேட்பாளர் மருத்துவர் ரித்து சிங். சமூக ஆர்வலராக பல தொண்டுகள் ஆற்றிய ரித்து, தற்போது இந்தியத் தேர்தல்கள் 2024 ல் மாயாவதியின் ஆதரவில் வேட்பாளராக சண்டிகர் தொகுதியில் களமிறக்கப்பட்டு இருக்கிறார்.
ஆதரவார்களின் வேண்டுகோள்: இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சண்டிகர் தொகுதியில் மும்மரமாகியுள்ள நிலையில், வேட்பாளர் ரித்து நேற்று தனது ஆதரவாளர்களுடன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அச்சமயம், ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோவிலுக்கு சென்று இருந்தார். US Storms: அமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி புயல்கள்; 23 பேர் பலி., இருளில் மூடிய 3 இலட்சம் வீடுகள்.!
தலையில் விழுந்த தராசு: அங்கு ஆதரவாளர்கள் எடைக்கு எடை என வேட்பாளரை எடைத்தராசில் அமரவைத்து நாணயங்களை அடுக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தராசின் அமைப்பு மொத்தமாக திடீரென உடைந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் வேட்பாளரின் தலையிலேயே எடை தராசு விழுந்தது.
காயமடைந்த வேட்பாளர்: இதனால் தலையில் படுகாயமடைந்த வேட்பாளர், அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது வேட்பாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 01ம் தேதி தேர்தல் என்பதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர் சிகிச்சை பெற்ற கையுடன் திரும்ப வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
உங்களின் பார்வைக்கு வீடியோ: