Dam Empty For Mobile: செல்போனுக்காக அணை நீரை காலி செய்த அரசு அதிகாரி பணியிடைநீக்கம்; அதிரடி நடவடிக்கை.!
நீருக்குள் விழுந்த செல்போனை எடுக்க அதிகாரி எடுத்த செயல் அதிரவிழாய்களை ஏற்படுத்தியுள்ளன.
மே 27, கன்கேர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கன்கேர் (Kanker, Chhattisgarh) மாவட்டத்தில் பரல்கோட் நீர்த்தேக்கம் (Paralkot Reservoir) உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் விஷ்வாஸ் (Rajesh Vishwas) என்பவர் வழக்கமான சோதனைக்கு வருகை தந்து, அங்குள்ள சுற்றுவட்டார கடைகளில் உணவுப்பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து அணைக்கு (Dam) வந்து செல்பி (Selfie) எடுக்க முயற்சித்தபோது, அவரின் விலையுயர்ந்த செல்போன் நீருக்குள் தவறி விழுந்துள்ளது. இதனால் மின்மோட்டார்கள் வைத்து அணையில் இருந்த நீர் முழுவதையும் வெளியேற்றிய ராஜேஷ் தனது செல்போனை எடுத்துள்ளார். Yasin Malik: காஷ்மீர் பிரிவினைவாதி யாஸீன் மாலிக்-க்கு மரண தண்டனை வழங்க என்.ஐ.ஏ டெல்லி நீதிமன்றத்தில் மனு..!
இந்த விசயம் தொடர்பாக செய்திகள் வெளியாகி, தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவு பதுகாப்புத்துறை அதிகாரி ராஜேஷ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒரு செல்போனுக்காக ஊருக்கே நீர் கொடுத்த அணையை காலி செய்த அரசு அதிகாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.