Dangerous Bike Ride Viral Video (Photo Credit: @Nai_Dunia X)

அக்டோபர் 15, பிலாஸ்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் (Bilaspur) நகரத்தில் சில இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மீறி, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி (Bike Viral Video) வருகிறது. வைரல் வீடியோவில், 5 இளைஞர்கள் ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இளைஞர்கள் எந்த பாதுகாப்பு கவசமும் இல்லாமல், ஹெல்மெட் அணியாமல் தெருக்களில் சுற்றித் திரிவதைக் காணலாம். இச்சம்பவம் நகரின் சிபாட் சவுக்கில் நடந்ததாகக் கூறப்படுகிறது. Viral Video: கையும் களவுமாக பிடிபட்ட கணவர்.. நடுரோட்டில் மனைவி, காதலி சரமாரி தாக்குதல்.., வீடியோ வைரல்..!

ஆபத்தான பயணம்:

போக்குவரத்து விதிகளின்படி, இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், இளைஞர்கள் 5 பேரை ஏற்றிச் சென்று விதிகளை மீறிச் செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நகரத்தில் அடிக்கடி நடக்கின்றன. மேலும், சில இளைஞர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக்குகளை ஓட்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒரு சிலர், சாலைகளில் பைக் ஸ்டண்ட் செய்கிறார்கள். இது விபத்துகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதுதொடர்பாக, காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: