Chhattisgarh Train Accident (Photo Credit : @DeccanChronicle X)

நவம்பர் 04, சத்தீஸ்கர் ( Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் ஹவுரா ரயில் வழித்தடத்தில் பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. சத்தீஸ்கரில் உள்ள ஜெயராம் நகர் ரயில் நிலையத்தில் பயணிகள் மெமு ரயிலும், சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த பெரும் விபத்து நடந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டோரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். Tamil Nadu Board Exam 2026: 12, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை தேதிகள் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.!

சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில்:

முதற்கட்டமாக இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக கூறப்படும் நிலையில், அதிகாரிகள் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நேருக்கு நேர் மோதி விபத்து ஏதும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த கோர ரயில் விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பல ரயில் பெட்டிகள் தடம்புரண்டுள்ளதால் படுகாயம் அடைந்தோரின் எண்ணிக்கையும் உயர வாய்ப்புள்ளது. இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் மேற்படி சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ரயில் விபத்து தொடர்பான பதறவைக்கும் வீடியோ: