Delhi Air Pollution: காலையிலேயே மக்களை வாட்டி வதைக்கும் காற்றுமாசு: மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பிரதான பகுதிகளில் காற்றுமாசு 398 AQI புள்ளிகளை கடந்து பதிவாகி வருகிறது.

Delhi Air Pollution (Photo Credit: @ANI X)

நவம்பர் 18, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகர் டெல்லியை சுற்றிலும் அமைந்துள்ள பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், விவசாய அறுவடை முடியும் நடப்பு மாதத்தில், விளைநிலத்தை கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால் டெல்லி மாநகர மக்கள் கடுமையான காற்று மாசுபாடை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 400 புள்ளிகளை கடந்து காற்றுமாசு பதிவாகி இருந்த நிலையில், தீபாவளியை நெருங்கிய சமயத்தில் பெய்த திடீர் மழை காரணமாக காற்றுமாசு இயற்கையாக சற்று சரிசெய்யப்பட்டு இருந்தது. இதற்கிடையில், தற்போது மீண்டும் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது. Robbery Ends Arrest: திரைப்பட பாணியில் திருடனின் கையைக்கடித்து தப்பிய பெண்மணி; சில்வண்டுகளை 4 கி.மீ துரத்திப்படித்த அம்பத்தூர் காவல்துறை.! 

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பிரதான பகுதிகளில் காற்றுமாசு 398 AQI புள்ளிகளை கடந்து பதிவாகி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் நல்ல காற்றை சுவாசிக்க இயலாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது உடல்நல பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காலை நேரத்தில் கூட காற்றுமாசு காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், காசிப்பூர் மற்றும் டெல்லியின் பிரதான பகுதிகளில் நிலவும் காற்றுமாசுபாடால் சிறுவர்கள் முதல் வயோதிகர்கள் வரை அவதிப்பட்டு வருகின்றனர்.