Delhi Metro Couple Kissing Video: உதட்டோடு உதடு வைத்து.. பொதுமக்கள் முன் அத்துமீறிய காதல் ஜோடி.. டெல்லி மெட்ரோவில் பகீர்.!
காதல் ஜோடி, வயது வந்தோருக்கான கவர்ச்சி காட்சிகளுக்கு பிரபலமான இடமாக மாறிவரும் டெல்லி மெட்ரோவில் அடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
செப்டம்பர் 25, புது டெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மக்களின் விரைவு பயணத்தை, தடையின்றி தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய மெட்ரோ இரயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாளொன்றுக்கு கோடிக்கணக்கான பயனர்கள் டெல்லி மெட்ரோ வழித்தடத்தை தங்களின் பணிகளுக்காக உபயோகம் செய்கின்றனர். வார இறுதி நாட்களில் டெல்லி மெட்ரோவில் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆனால், சமீபகாலமாகவே டெல்லி மெட்ரோவில் கவர்ச்சி நடனம், காதல் ஜோடியின் அந்தரங்க வரம்பு மீறும் செயல்கள் அப்பட்டமாக பயணத்தின்போதே மேற்கொள்ளப்பட்ட வீடியோ காணொளிகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை தந்தன. Women Fight on Train: இரயில் பயணத்தில் தள்ளுமுள்ளு; பளார் பளாரென அறைந்து சண்டையிட்ட பெண்கள்..!
இந்நிலையில், காதல் ஜோடியொன்று டெல்லி மெட்ரோ இரயிலில் ஆனந்த் விஹார் பகுதியில் தங்களின் அன்பை முத்தங்கள் வாயிலாக உதட்டோடு உதடு வைத்து பரிமாறி பயணித்தது. பொதுமக்கள் முன்னிலையிலேயே தங்களின் தனிப்பட்ட அன்பை பரிமாறி பலரையும் பதறவைத்தது.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஏற்கனவே டெல்லி மெட்ரோ நிர்வாகம் இவ்வாறான விவகாரங்களை தடுக்க இயலாமல் தவிக்கும் நிலையில், தற்போது மீண்டும் காதல் ஜோடியின் அத்துமீறல் வீடியோ வெளியாகியுள்ளது.