Mumbai Local Train Women Fight (Photo Credit: Twitter)

செப்டம்பர் 25, மும்பை (Social Viral): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்பொருட்டும், வளர்ந்துவரும் நகரங்களின் பட்டியலில் உள்ள மாநகரை விரிவுபடுத்தவும், எளிமையான போக்குவரத்து உட்பட பிற வசதிக்காகவும் மும்பை புறநகர் இரயில் சேவை கொண்டு வரப்பட்டது.

ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி கிட்டத்தட்ட 170 ஆண்டுகளை கடந்து மின்சார புறநகர் இரயில் சேவை வழங்கப்படுகிறது. 400 கி.மீ தூரம், 7 பிரிவுகள், 150 இரயில் நிலையங்களை இணைத்து மும்பை புறநகர் இரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 2,342 இரயில்கள் இயக்கம், 7.5 மில்லியன் மக்களின் பயணம் என சர்வதேச அளவில் பரபரப்பான இரயில் நிலையங்களில் மும்பை இரயில் நிலையம் முக்கியமானது ஆகும். Prize Money for World Cup 2023: ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் முதல் பரிசுத்தொகை எவ்வுளவு? யாருக்கு?.. முழு விபரம் உள்ளே.! 

கூட்டநெரிசல் மிகுந்த முக்கிய உலகளாவிய இரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும் மும்பை புறநகர் இரயில் சேவையில், மக்கள் தினமும் அனுபவிக்கும் பயண துயரங்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை. அவ்வப்போது இடநெருக்கடி காரணமாக சண்டைகளும் நிகழும்.

இந்நிலையில், சம்பவத்தன்று மும்பை புறநகர் இரயில் பயணம் செய்த 2 பெண்களுக்கு இடையே எழுந்த வாக்குவாதம் கைகலப்பாக முற்றி, இருவர் மாறிமாறி பளார் பளாரென அறைந்து சண்டையிட்ட அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.