School Teachers Vacancy: ஆசிரியர்களுக்கான 8.4 இலட்சம் காலிப்பணியிடங்கள்: மாநில வாரியாக ரிப்போர்ட் கொடுத்த மத்திய கல்வி அமைச்சகம்.. அதிர்ச்சி விபரங்கள் இதோ.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக இதுதொடர்பான தொடர் போராட்டமும் நடக்கின்றன.
டிசம்பர் 05, புதுடெல்லி (New Delhi): குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பல பாராளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அரசிடம் தங்களின் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய கல்வி அமைச்சகத்திடம் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கான (School Teachers Vacancy in India) காலிப் பணியிடங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
மத்திய கல்வி அமைச்சகம் பதில்: அப்போது, மத்திய கல்வி அமைச்சகம் அளித்த பதில் தற்போது பலரையும் அதிர்ச்சியுற்ற வைத்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்த பதிலின்படி, இந்தியாவில் இருக்கும் அரசு பள்ளிகளில் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8.4 இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது அம்பலமாகியுள்ளது.
மொத்தமாக 9.8 இலட்சம் காலிப்பணியிடங்கள்: ஆரம்ப நிலையில் உள்ள தொடக்கப்பள்ளியில் 7.2 இலட்சம் ஆசிரியர்களுக்கான பணியிடங்களும், இரண்டாம் நிலையில் 1.2 இலட்சம் ஆசிரியர்களுக்கான பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. இவ்வாறாக மொத்தமாக 9.8 லட்சம் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்படாமல் இருக்கின்றன. Fasting Benefits: விரதம் இருப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?.. 72 மணிநேரம் தொடர்ந்தால் என்னவாகும்?.. விபரம் இதோ.!
ஆரம்பப்பள்ளி காலிப்பணியிட விபரங்கள்: இவற்றில் எண்ணிக்கை வாரியாக பீகார் மாநிலத்தில் 1,92,097 காலிப்பணியிடங்களும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 1,43,564 காலிப்பணியிடங்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 75,726 காலிப்பணியிடங்களும், மேற்குவங்க மாநிலத்தில் 53,137 காலிப்பணியிடங்களும், மத்திய பிரதேசம் மாநிலத்தில் 52,394 காலிப்பணியிடங்களும் இருக்கின்றன. இவை ஆரம்பப்பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் தொடர்பான விபரங்கள் ஆகும்.
மேல்நிலைப்பள்ளி காலிப்பணியிட விபரங்கள்: அதேபோல, மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில் பீகார் மாநிலத்தில் 32929 காலிப்பணியிடங்களும், ஜார்கண்ட் மாநிலத்தில் 21,717 காலிப்பணியிடங்களும், மத்திய பிரதேச மாநிலத்தில் 15,145 காலிப்பணியிடங்களும், உத்தர பிரதேச மாநிலத்தில் 7,492 காலிப்பணியிடங்களும், மேற்குவங்க மாநிலத்தில் 7,378 காலிப்பணியிடங்களும் இருக்கின்றன.
பூஜ்ய காலிப்பணியிடங்கள்: மகாராஷ்டிரா, கேரளா. கோவா, மேகாலயா, நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்களில் முதல்நிலை காலிப்பணியிடங்கள் என்பது இல்லை. அதேபோல, கேரளா, மகாராஷ்டிரா, நாகலாந்து, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் நிலை காலிப்பணியிடங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாநிலங்களில் சொற்ப அளவிலான காலிப்பணியிடங்களே இருக்கின்றன.