Fasting | No Food in Plate (Photo Credit: Pixabay)

டிசம்பர் 05, சென்னை (Chennai): இந்தியாவில் விரதம் என்பது மதம் சார்ந்த வழிபாடுகளில் கடைபிடிக்கப்படும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. பண்டிகை காலங்களில், திருவிழாக்கள் நடக்கும்போதும் தெய்வங்களுக்காக தினமும் ஒருவேளை விரதம் இருந்து தங்களின் பக்திகளை பலரும் வெளிப்படுத்துவார்கள்.

மருத்துவர்களின் அறிவுரை: விரதம் தவறில்லை எனினும் தொடர்ச்சியான விரதம் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதிலும், மூன்று நாட்கள் தொடர்ந்து உணவு உண்ணாமல் தண்ணீர் மட்டுமே சிலர் குடித்து வருகிறார்கள். இவ்வாறு இருப்பது உடல் எடையை வெகுவாக குறைத்து விடும், உடலுக்கும் ஆபத்தானது.

உடல் உறுப்புகளை சாப்பிடும்: 72 மணி நேரம் விரதம் இருந்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். விரதத்தின் தொடக்கத்தில் உடலில் இருக்கும் க்ளைபோஜன் ஆற்றலுக்காக தனது உடல் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்ளும். இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு இதனால் குறைந்து போகும். Hybrid Wolf Dog Pet Killed Baby: 3 வயது பச்சிளம் குழந்தை கடித்துக்குதறி கொலை செய்த நாய்: நரியின் கலப்பின செல்லப்பிராணியால் நடந்த சோகம்.! 

எடை இழப்புக்கு வழிவகை செய்யும்: உணவு உண்ணாமல் விரதம் தொடரும்போது, உடலில் சேர்ந்து இருக்கும் கொழுப்பானது வெகுவாக எரியூட்டப்படும். பின் வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தி, எடை இழப்புக்கும் வழிவகை செய்யும். இது ஆரோக்கியமான விரத வழிபாடுகள் இல்லை. இந்த எடை உழைப்பு ஆரோக்கியமானது கிடையாது.

7000 கலோரி பற்றாக்குறையும், 900 கிராம் கொழுப்பு வெளியேற்றமும்: 72 மணி நேரம் உண்ணாமல் இருப்பவர்களுக்கு, உடலில் 7000 கலோரிகள் பற்றாக்குறை ஏற்படும். இது உடலில் 900 கிராம் கொழுப்புகளை கரைத்து விடுகிறது. பின்னாளில் உடல் எடை மோசமாக பாதிக்கப்பட்டு, சிலருக்கு அவை ஒத்துக் கொள்ளாமல் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

தொடர் விரதம் தீராத பிரச்சனையை தரும்: விரதத்தின் போது போதுமான அளவு நீர் குடிப்பது, வைட்டமின், தாதுக்கள் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இல்லாத பட்சத்தில் நாம் ஊட்டச்சத்து பிரச்சனையும் எதிர்கொள்ள நேரிடும். தீராத சிறுநீரக பாதிப்பு, இரத்த அழுத்தம், கால்சியம், மெக்னீசியம் இழப்பு, சோடியம் பற்றாக்குறை, மெலிந்து போதல் போன்ற பிரச்சனைகளையும் 72 மணி நேர தொடர் உண்ணாவிரதத்தால் சந்திக்க வேண்டியிருக்கும்.

குறுகிய கால விரதத்தின் நன்மைகள்: நீரிழிவு நோயாளிகள் விரதத்தை மேற்கொள்ளாமல் தவிர்ப்பதே நல்லது. ஆனால் குறுகிய கால விரதம் என்பது புற்றுநோய், இதய செயலிழப்பு, அல்சைமர் மற்றும் நரம்பு பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவி செய்கிறது. உடலில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிவதற்கும், நன்மை தரும் பாக்டீரியாக்கள் வளர்ச்சியடைவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், கல்லீரல் நொதிகள் மேம்படவும் குறுகிய கால அளவிலான விரதங்கள் உதவி செய்கின்றன.