CBSE 10th Results 2024: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; 93.60% தேர்வர்கள் தேர்ச்சி பெற்று சாதனை.!

அதனை விபரமாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

CBSE Results 2024 (Photo Credit: cbseresults.nic.in)

மே 13, புதுடெல்லி (New Delhi): மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education CBSE ) சார்பில் நடத்தப்படும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான (CBSE 12th Class Results 2024) பொதுத்தேர்வுகள் இன்று (மே 13, 2024) காலை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 1,426,420 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91%, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.6% பெற்று சாதனை படைத்தனர். தேர்வெழுதிய மாணாக்கர்களில் 24,000 மாணவர்கள் 95% மதிப்பெண்களும், 1.16 இலட்சம் மாணவர்கள் 90% மதிப்பெண்களும் பெற்றிருந்தனர். Couple Romance In Bus: பேருந்து பயணத்தில் எல்லை மீறிய காதல் ஜோடி; ரொமான்ஸ் காட்சிகள் வைரல்.! 

சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு (CBSE 10th Class Results) முடிவுகள் வெளியீடு: அதனைத்தொடர்ந்து, சிபிஎஸ்சி கல்வி வழியில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அரசின்  என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணுக்கு, அவர்களின் பாடவாரியான மதிப்பெண் விபரமும் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் விபரம் பின்வருமாறு: தேர்வு முடிவுகளின்படி, 25 ஆயிரத்து 724 பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்காக 7663 தேர்வு மையங்களில் சிபிஎஸ்சி பொது தேர்வுகள் நடைபெற்றுள்ளன. 22,38,827 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 2,095,467 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தமாக தேர்வு எழுதியவர்களில் 93.60 விழுக்காடு நபர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 99.75 விழுக்காடு தேர்ச்சி விகிதம், விஜயவாடாவில் 99.60 சதவீதமும், சென்னையில் 99.30 சதவீதமும் தேர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.75 விழுக்காடும், மாணவர்கள் 92.71% தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 47000 பேர் 95 விழுக்காடுக்கு அதிகமாகவும், 2,12,000 பேர் 90 விழுக்காடுக்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.