TN School Students (Photo Credit: @cinnattampi X)

ஆகஸ்ட் 08, தலைமை செயலகம் (Chennai News): சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூலகம் கலையரங்கத்தில் நடந்த மாநில பள்ளிக்கல்வித்துறை அரசுவிழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை அறிமுகம் செய்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு உட்பட பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. State Education Policy: மாநில கல்விக் கொள்கை வெளியீடு: என்னென்ன அம்சங்கள்? முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை.. விபரம் உள்ளே.!

பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவிப்பு:

இந்நிலையில், புதிய மாநில கல்விக்கொள்கையின்படி, தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் இருந்து 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்தாகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் மாற்றம் இல்லை. அது திட்டமிட்டபடி நடைபெறும். 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை அமலில் இருக்கும். அதில் மாற்றம் கிடையாது. இருமொழி கொள்கை மட்டுமே தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்படும். மும்மொழிக்கொள்கை என்ற விஷயத்துக்கும் இடமில்லை. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.