TCS Q2 Results (Photo Credit : @GoodreturnsTa X)

செப்டம்பர் 25, புதுடெல்லி (Technology News): டாடா கன்சல்டன்சி நிறுவனம் (TATA Consultancy Services Company) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் ஒன்றாகும். இந்நிறுவனத்தில் நேரடியாக 6 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் டாடா நிறுவனம் தனது தொழில்நுட்ப சேவையையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டுக்கான ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு நிதி முடிவுகளை வரும் அக்டோபர் மாதம் 09-ஆம் தேதி அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது. TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்? 

இடைக்கால டிவிடண்ட் அதிகரிக்க வாய்ப்புள்ளதா?

மேலும் அதே நாளில் டிசிஎஸ் வாரிய குழு கூட்டம் நடைபெறும் எனவும், கூட்டத்தின் முடிவில் இடைக்கால ஈவுத்தொகை (TCS Interim Dividend) குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஒரு பங்கிற்கு ரூ.11 இடைக்கால ஈவுத்தொகையாக டிசிஎஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருந்தது. இதனால் இம்முறை ஈவுத்தொகையின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா? என பங்குதாரர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதியான நேற்று வரை டிசிஎஸ் பங்கின் விலையானது ரூ.3,036 என வர்த்தகமானது. இந்த காலாண்டு முடிவில் நிகர லாபமாக 4.38% உயர்ந்துள்ளது.

பங்குதாரர்கள் எதிர்பார்ப்பு :

இந்த ஆண்டை பொறுத்தவரையில் பங்குதாரர்களுக்கு பெரிய அளவில் லாபம் எட்டவில்லை என்று தான் கூற வேண்டும். கடந்த ஓர் ஆண்டில் டிசிஎஸ் பங்கின் மதிப்பானது சுமார் 28% சரிவை கண்டுள்ளது. அமெரிக்கா விசா விதிகள், டாலர் மதிப்பு, வரி விகிதங்கள், AI வருகை மற்றும் ஐடி துறையின் மந்த நிலை போன்ற காரணங்களால் சரிவை சந்தித்த டிசிஎஸ் நிறுவனம் பல சவால்களுக்கு மத்தியிலும் காலாண்டு முடிவுகளை வெளியிட இருக்கிறது. இதனால் பங்குதாரர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

TCS ஜூலை - செப்டம்பர் மாத காலாண்டு நிதி முடிவு அறிவிப்பு :