NEET PG Exam: முதுநிலை நீட் தேர்வு... எப்போது நடைபெற உள்ளது?.. வெளியான அறிவிப்பு..!

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வானது ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET PG Exam (Photo Credit: @otvnews X)

ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை (NEET PG Exam) எழுதுகின்றனர். தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வானது ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட் ஆஃப் மதிப்பெண்ண் ஆனது ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும். இந்தத் தேர்வுகளின் பிற விவரங்களுக்கு அறிவிக்கப்பட்டவுடன் https://natboard.edu.in என்ற NBEMS இணையதளத்தைப் அணுகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Apple Vision Pro: ஆப்பிள் விஷன் ப்ரோவின் விற்பனை தேதி அறிவிப்பு... இனி கம்ப்யூட்டருக்கு வேலையே இல்லை..!