NCERT New Update: அப்படிப்போடு.. இனி மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் மாற்றம்?.. என்சிஇஆர்டி கவுன்சில் பரிந்துரை.!
எதிர்கால இந்தியாவில் கல்வியை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது.
ஆகஸ்ட் 27, புதுடெல்லி (New Delhi): இந்திய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி (National Council of Educational Research and Training NCERT), 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு புதிய மதிப்பீடு விபரத்தை மத்திய கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களின் மதிபெண்கள், 9-11 என 3 வகுப்புகளில், அவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும். தொழிற்கல்வி, திறன் அடிப்படையிலான பயிற்சியும் வழங்கப்படும். ஒவ்வொரு கல்வி வாரியத்திலும் சமத்துவத்தை ஏற்படுத்தும் பெயரில், மதிபெண் வழங்கும் முறைகளில் மாற்றத்தை கொண்டு வர இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. US Shocker: பெற்றோர், வளர்ப்பு நாய் கொடூர கொலை; 41 வயது இளைஞரை நடுரோட்டில் சுட்டுப்பிடித்த காவல்துறை.!
மதிப்பெண் கணக்கிடும் முறைகள்:
ஒன்பதாம் வகுப்பில் மாணவர் பெற்ற மதிப்பெண்ணில் 15%, 10ம் வகுப்பு மதிப்பெண்ணில் 20%, 11ம் வகுப்பில் 25%, 12ம் வகுப்பில் 40% மதிப்பெண்கள் இதற்கு எடுத்துக்கொள்ளப்படும். மதிப்பெண் வழங்குதலுக்கான வரையறையில் 9ம் வகுப்பில் 70% மதிப்பெண் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும். எஞ்சிய 30% மதிப்பெண் கூட்டு மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும். அதேபோல, 10ம் வகுப்பில் 50 க்கு 50% என சமமான மதிப்பீடு வழங்கப்படுகிறது. 11ம் வகுப்பில் 40% மற்றும் 60% என மதிப்பீடுகள் கணக்கிடப்படும். 12ம் வகுப்பில் 30% மதிப்பெண் படிவத்திலிருந்தும், 70% மதிப்பெண் கூட்டு மதிப்பீட்டில் இருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும். தற்போது பரிந்துரைக்கப்பட்ட மதிப்பெண் அளவீடுகள் வாயிலாக தரவு மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, இசை, கலைகள், கைவினைப்பொருட்கள் போன்ற தொழிற்சார், திறன்சார் பாடங்களும் அறிமுகம் செய்யப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.