NCERT Removes Preamble: பாடப் புத்தகங்களிலிருந்து அரசியல் சாசனத்தின் முகப்புரை நீக்கம்.. என்சிஇஆர்டி விளக்கம்..!

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.

NCERT (Photo Credit: NCERT Website)

ஆகஸ்ட் 06, புதுடெல்லி (New Delhi): தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது நாட்டின் அரசியல் சாசனத்தின் முகப்புரையை, 3, 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது என்சிஇஆர்டி. 2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 6-ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை இடம் பெற்றுள்ளது. ஆனால் சமூக அறிவியல் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அரசியல் சானத்தின் முகப்புரையே இல்லாமல், அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள அடிப்படை உரிமைகள், கடமைகள் பற்றி பேசுகிறது 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம். இது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள். First Informer Of Landslide In Wayanad Dies: வயநாடு கடும் நிலச்சரிவு; முதலில் தகவல் அளித்த பெண் ஊழியர் பலி.. ஆடியோ வைரல்..!

என்சிஇஆர்டி விளக்கம்: தற்போது இதுகுறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது .அரசியல் சாசன நூலின் சகல பகுதிகளுக்கும் என்சிஇஆர்டி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. பாடநூலில் அடிப்படை கடமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய கீதம் என எல்லாவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் வெவ்வேறு நிலைகளில் பாடநூலில் இடம் பெற்று இருக்கின்ற நிலையில் அரசியல் சாசனத்தின் முகப்புரை தான் அரசியல் சாசன விரும்பியங்களை பிரதிபலிப்பாக இருக்கும் புரிதல் தவறானது." என்று குறிப்பிட்டுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif