The Rock Latest Photo (Photo Credit : @creepydotorg X)

செப்டம்பர் 03, கலிபோர்னியா (Cinema News): குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமானவர் டுவைன் ஜான்சன். The Rock என்ற இயற்பெயரைக் கொண்ட 53 வயது நடிகர் WWE மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு பிரபலமானார். இவரை ராக் என்றால் பலருக்கும் தெரியும். ஹாலிவுட்டில் வெளியான ஜுமாஞ்சி, சான் ஆண்ட்ரியாஸ், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், பிளாக் ஆடம், தி ஸ்கார்பியன் கிங் உட்பட பல்வேறு படங்களில் நடித்து இவர் உலக அளவில் பிரபலம் பெற்று இருக்கிறார். ராக் என்ற பெயருக்கு ஏற்ப உடலை பாறை போல கட்டுக்கோப்பாக வைத்து இருந்ததால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்திருந்தன. Modi-Putin Meeting: ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காரில் பயணம்.. கலக்கத்தில் அமெரிக்கா.! 

Rock-க்கு என்னாச்சு ?

இந்நிலையில் சமீபத்தில் அவர் பொதுவெளியில் தோன்றியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது அவர் தனது இயல்பான உடல் பாகத்தில் இருந்து மிகவும் மாறுபட்ட தோற்றத்தில் ஒல்லியாக (Dwayne Johnson weight loss) காணப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களின் வழியாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ராக்குக்கு என்ன ஆனது? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இவர் அடுத்து வரும் படத்துக்காக இதுபோன்ற மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றாலும் எதற்காக இந்த உடனடி மாறுதல் என கேள்வி எழுப்பி வருகின்றனர். பாக்சிங் வீரர் கதாபாத்திரத்தில் ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வருகிறது. இதற்காக உடல் எடையை 27 கிலோ அளவில் குறைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இணையத்தில் தீயாய் பரவும் The Rock லேட்டஸ்ட் வீடியோ :