UGC discontinues MPhil degree: எம்ஃபில் டிகிரி இனி செல்லாது... யுஜிசி அதிரடி அறிவிப்பு..!

எம்ஃபில் டிகிரி இனி செல்லாது என யுஜிசி அதிரடி அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.

UGC (Photo Credit: @rajdav786 @yuvnique X)

டிசம்பர் 27, டெல்லி (Delhi): மாணவர்கள் எம்.ஃபில் (M.Phil) படிப்புகளில் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு, கற்பித்தல் பணிக்கு எம்.ஃபில் தகுதியானது இல்லை என்பதால் 2022-23 ஆம் ஆண்டிலிருந்து எம்ஃபில் படிப்பு நீக்கப்படுகிறது என்றும், இனிமேல் இந்த படிப்பில் யாரும் சேர வேண்டாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட எம்.ஃபில் பட்டங்கள் செல்லும் என்றும் யுஜிசி தெரிவித்திருந்தது. Pune Gas Cylinders Explosion: 100 சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து; 10 சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி.!

யுஜிசி அதிரடி அறிவிப்பு: இருப்பினும் சில பல்கலைக்கழகங்கள் அந்த படிப்புக்கு மாணவர்களை சேர்த்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, எம்.ஃபில் படிப்புக்கு அங்கீகாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து ஏமாற வேண்டாம் என்றும், இந்த படிப்புக்கான அங்கீகாரம் ஏற்கெனவே நிறுத்தப்பட்டு விட்டது என்றும் யுஜிசி அதிரடி அறிவிப்பு ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.