டிசம்பர் 27, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே (Pune LPG Cylinder Blast), விமன் நகர் பகுதியில் சிம்போசிஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில், சட்டவிரோதமாக 100 க்கும் மேற்பட்ட எல்பிஜி சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது.
திடீரென வெடித்த சிலிண்டர்கள்: இந்நிலையில், சிலிண்டர்கள் திடீரென தீயில் பிடியில் சிக்கி அடுத்தடுத்து வெடித்து சிதற தொடங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உடனடியாக தீயை தண்ணீரை பீய்ச்சி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
#Pune: Multiple Cylinder Blasts Shake Viman Nagar; Fire Brigade Suspects 10 out of 100 Cylinders Exploded pic.twitter.com/1pafNyufJI
— Punekar News (@punekarnews) December 27, 2023
தீயை கட்டுக்குள் கொண்டு வந்த அதிகாரிகள்: தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 3 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில், சட்டவிரோதமாக 100 சிலிண்டர்களை வைத்திருந்தது தெரியவந்தது.
தொடரும் விசாரணை: தீ விபத்திற்கான காரணம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக மக்களின் உயிருக்கு எந்த விதமான சிறு சேதாரமமும் ஏற்படவில்லை.
Maharashtra | At least 10-12 LPG cylinders exploded near Symbiosis College in the Viman Nagar area of Pune city. Around 100 LPG gas cylinders were stored illegally in an under-instruction site. Out of 100 LPG cylinders, 10 cylinders exploded after a fire. 3 fire tenders are…
— ANI (@ANI) December 27, 2023