Electricity Charges Cancel In Wayanad: வயநாட்டில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து; அரசு அதிரடி அறிவிப்பு..!

கேரளாவில் கடும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Wayanad Landslides (Photo Credit: @AnuSatheesh5 X)

ஆகஸ்ட் 07, வயநாடு (Kerala News): கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் (Wayanad Landslide) கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வந்த முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடி, பூஞ்சேரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட மலை கிராமங்கள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து 9-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3-Year-Old Girl Dies After Dog Falls on Her: மாடியில் இருந்து விழுந்த நாய்.. பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர்களிடம் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் (Electricity Charges Cancel) வசூலிக்கப்பட மாட்டாது என்று கேரள மாநில மின்சாரதுறை மந்திரி கிருஷ்ணன் குட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக 10 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.