செப்டம்பர் 27, கரூர் (Karur News Today): தமிழக அரசியலில் (Tamilnadu Politics) புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (2026 Assembly Elections Tamilnadu) இன்னும் 8 மாதங்களே இருக்கின்றன. இதனை இலக்காக கொண்டு களமிறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்ட விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பின் கரூர் நகருக்கு சென்றார். இந்த மக்கள் சந்திப்பின்போது தேவையான பாதுகாப்பு & முன்னெச்சரிக்கை பணிகளை காவல்துறையினர், மாவட்ட நிர்வாகம், தவெக தொண்டர்கள் மேற்கொண்டு இருந்தனர். TVK Vijay in Namakkal: 'பிரியமுடன் விஜய்'தவெக தலைவர் விஜய் செயலால் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்.. திணறிய நாமக்கல்.!
கரூர் கூட்டநெரிசல் மரணம் (Karur Stampede Death Today):
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் கரூர் மாநகரில் பிரச்சாரம் செய்ய மாலை வந்திருந்தார். நாமக்கல்லில் காலை அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில், தொண்டர்கள் அளவுக்கு அதிகமாக திரண்டதால் வழிநெடுக வாகனம் மெதுவாக நகர்ந்து மதியத்துக்கு மேல் பிரச்சாரப் பணிகள் தொடங்கின. அதனைத்தொடர்ந்து, கரூர் நகரில் இரவு நேரத்தில் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்தார். விஜய் பிரச்சாரத்திற்கு பங்கேற்ற இடம் முழுவதும் தொண்டர்கள் குவிந்த காரணத்தால், எங்கும் மக்கள் படையாக திரண்டு இருந்தனர். அப்போது, விஜய் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஒரு இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் உட்பட 36க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. IND Vs PAK Asia Cup Final 2025: ஆசியக்கோப்பை 2025 தொடரில், இந்தியா Vs பாகிஸ்தான் இறுதி யுத்தம்.. எப்போது? நேரலை எப்படி? விபரம் இதோ.!

தவெக விஜய் கூட்டத்தில் 36 பேர் கூட்ட நெரிசலால் மரணம்:
உயிருக்கு போராடியவர்களை தவெக நிர்வாகிகளும், காவல்துறையினரும் இணைந்து மீட்டு அங்குள்ள கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இருப்பினும் பலரும் கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூற அனுப்பி வைத்தார். தொடர்ந்து, விஜய் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் இரவோடு இரவாக புறப்பட்டு கரூர் செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலை அடுத்தடுத்து பதிவு செய்து வருகின்றனர்.
இழப்பீடு அறிவிப்பு (Tamilnadu Govt Announcement on Karur Tragedy):
இந்த துயரம் குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். நாமக்கல், கரூர் பிரச்சார கூட்டத்தின்போது ஊழல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விஜய் கடுமையாக விமர்சித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து இருந்தார். அவரின் பேச்சு தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும்போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டபின் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டதாக நேரில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அதிகம் முன்பக்கமாக வந்ததால் கூட்ட நெரிசல் என பெண் தகவல்:
எல்லாரும் தூரமா தான் நின்றுக்காங்க...அப்பறம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க..அதனால அவர் பேசுவது எதுவும் கேட்கவில்லை...அதனால் எல்லாரும் முன்னாடி போனா பேசுவது கேட்கும் என்று முன்னாடி போக ஆரம்பிச்சிட்டாங்க - மயக்கமடைந்தவர்களுடன் ஆம்புலன்சில் வந்த பெண். pic.twitter.com/E5tM3qouEu
— Mʀ.Exᴘɪʀʏ (@Jana_Naayagan) September 27, 2025
குழந்தையை இழந்த நபர் கண்ணீர் கதறல் (Pray for Karur):
கல் நெஞ்சும் கரைந்துவிடுமே,
இந்த தந்தையின் கண்ணீரில்!
என்னவென்று ஆறுதல் சொல்வது?
"என்ன பேசினாலும் அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிர் தான் திரும்பி வந்து விடுமா?" என்ற மனவேதனையோடு கண் கலங்கி நிற்கும் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. @OfficeofminMRV அவர்கள்.
Heart wrenching.… pic.twitter.com/yQNuvg5doQ
— Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) September 27, 2025