Preeti Sudan Appointed As UPSC Chairman: UPSC தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம்; இந்திய ஜனாதிபதி ஒப்புதல்..!
1983 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் மத்திய சுகாதார செயலாளருமான ப்ரீத்தி சுதன், புதிய யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 31, டெல்லி (Delhi News): யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் (UPSC) புதிய தலைவராக முன்னாள் ஐஏஎஸ் (Ex-IAS Officer) அதிகாரி ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1983 பேட்ச் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஆந்திர பிரதேசம் மாநிலம் கேடரைச் சேர்ந்த ப்ரீத்தி சுதன் (Preeti Sudan), கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில், மத்திய சுகாதாரச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளராகவும் இருந்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர் அந்த பொறுப்பில் இருந்து 2020-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இவர், 37 ஆண்டுகள் அரசாங்க நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவராவார். Wayanad Landslides: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 126 பேர் பலி., 89 பேர் மாயம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இந்நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதி அன்று, டாக்டர் மனோஜ் சோனி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஜூலை 31, 2024 முதல் UPSC தலைவர் பதவியில் இருந்து டாக்டர் சோனியின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதற்கு முன், டாக்டர் மனோஜ் சோனி ஜூன் 28, 2017முதல் மே 15, 2023 வரை UPSC உறுப்பினராக பணியாற்றினார்.
இதனையடுத்து, ஆகஸ்ட் 01, 2024 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை அல்லது ஏப்ரல் 29, 2025 வரை, அரசியலமைப்பின் 316-வது பிரிவின், பிரிவு (1A) கீழ், UPSC தலைவராக ப்ரீத்தி சுதன் நியமனத்திற்கு, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.