Boat Capsize Accident: ஜீலம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 7 பேர் மீட்பு - 4 பேர் பலி..!
ஏப்ரல் 16, ஸ்ரீநகர் (Jammu And Kashmir News): ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர், ஜீலம் ஆற்றில் (Jhelum River) இன்று அதிகாலை பல பயணிகளுடன் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதுகுறித்து, பட்வாரா கந்தபால் பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். Teenager Murder Attempt: 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே..! – பெற்றோருக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி..!
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழு, மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அதில், 7 பேர் மீட்கப்பட்டு உடனடியாக ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதில், 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும், 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில், ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.