Bank Holidays on Sep 2024: வங்கி ஊழியர்களுக்கு குஷியோ குஷி.. செப்டம்பர் மாதம் விடுமுறை எப்படி?..!

இதனால் வங்கிகளில் பணம் செலுத்துவோர், பெரிய தொகை எடுக்க திட்டமிட்டு இருப்போர், தொழில்நிறுவனங்கள் வைத்திருப்போர் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.

Bank (Photo Credit: PIxabay).jpg

செப்டம்பர் 01, புதுடெல்லி (New Delhi): இந்திய அளவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, பண்டிகை நாட்கள் மற்றும் பிற மாநில அளவிலான விடுமுறை நாட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வங்கி பயனர்கள், பணம் செலுத்தவேண்டிய நடைமுறை மற்றும் தொழில்நிறுவனங்கள் தங்களின் பணவரவு விவகாரங்களில் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும், செப்டம்பர் மாதம் 01ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, மாதத்தின் முதல் நாளே விடுமுறை வந்துவிட்ட நிலையில், வாரம் அடுத்தடுத்து என 8 விடுமுறைகள் வங்கிப்பணியாளர்களுக்கு காத்திருக்கின்றன. அதன்விபரம் பின்வருமாறு.,

செப்டம்பர் 01 : ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 07 : விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 08 : ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 15 : ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 16 : மிலாடி நபி

செப்டம்பர் 22 : ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 28 : சனிக்கிழமை

செப்டம்பர் 29 : ஞாயிற்றுக்கிழமை

இதனைதவிர்த்து பிற மாநிலங்களில் நடைபெறும் திருவிழாக்களையொட்டி வழங்கப்படும் மாநில அளவிலான பொதுவிடுமுறையும் இதன் பட்டியலில் கூடுதலாக விடுமுறை தினமாக இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.