அக்டோபர் 28, கலிபோர்னியா (Technology News): தொழில்நுட்ப நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கம், வேலை இழப்பு போன்ற பிரச்சனைகள் மிகப்பெரிய விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. பல்லாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய பணி நீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக புகார்களும் எழுந்துள்ளன. குறிப்பாக ஐடி சார்ந்த தொழில்நுட்ப பணிகளில் வேலை பார்ப்போர் வேலையை இழந்து பரிதவிப்பதாகவும், இந்த விஷயம் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, இன்டெல், ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ் உட்பட பல நிறுவனங்களிலிருந்து பணி நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை (AI Technology) அறிமுகம் செய்ததன் வாயிலாக பலருக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. Realme C85 Pro 5G: 7000mAh பேட்டரியுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன்.. ரியல்மி சி85 ப்ரோ 5ஜி விரைவில் அறிமுகம்..!
அமேசான் நிறுவனம் அதிரடி:
அந்த வரிசையில் தற்போது அமேசான் நிறுவனமும் இணைந்துள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய இ-காமர்ஸ், மென்பொருள், கிளவுட் சேவை முறையிலான வணிக செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் நிறுவனம் அமேசான் (Amazon). அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் முதல் வளரும், வளர்ந்த, வளர்த்துக்கொண்டு இருக்கும் பல நாடுகளில் இ-காமர்ஸ் வணிகம் செய்து வரும் அமேசான் நிறுவனம் 5 லட்சம் பேரின் வேலைக்கு 10 ஆண்டுகளில் ஆப்பு வைக்க தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. தனது நிறுவனத்தில் மனிதர்களை நீக்கிவிட்டு, ஏஐ தொழில்நுட்பத்தை தேவையான இடங்களில் பயன்படுத்திக்கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 5 லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகி இருக்கிறது. உலகளவில் இந்த முயற்சியை மேற்கொள்ளவுள்ளது.
30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு:
அதனை உறுதி செய்யும் பொருட்டு அமேசான் நிறுவனம் தற்போது 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு 27,000 ஊழியர்களை அமேசான் பணி நீக்கம் செய்த நிலையில், தற்போது மீண்டும் பணி நீக்க நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் 10% பணியாளர்கள் நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் முடிவு காரணமாக, வரும் ஆண்டுகளில் பணிநீக்க நடவடிக்கை அதிரடியாக தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.